Home விளையாட்டு போராடி தோற்ற நடப்பு சம்பியன்: புள்ளிப்பட்டியலில் மாற்றம்

போராடி தோற்ற நடப்பு சம்பியன்: புள்ளிப்பட்டியலில் மாற்றம்

0

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய , முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 201 ஓட்டங்களை குவித்தது.

டிராவிஸ் ஹெட்(Travis Head) மற்றும் டேவிட் வோர்னர் (David Warner)கூட்டணி சேர்த்து 30 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தனர்.

ரி 20 உலககிண்ண தொடர் : எந்த அணிகள் முதலிடம் தெரியுமா..! வெளியானது புள்ளி பட்டியல்

 அவுஸ்திரேலிய அணி

டேவிட் வோர்னர் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார்.

ஹெட் 18 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆர்ச்சர் ஓவரில் ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ்(Mitchell Marsh) 25 பந்துகளில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல்(Glenn Maxwell) 28 ஓட்டங்களும் பெற்றனர்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ்(Marcus Stoinis )17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்களும். மேத்யூ வேட் 17 ஓட்டங்களும் பெற்று 202 ஓட்டங்களை வெற்றியிலக்காக நியமித்தனர்.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர்

இங்கிலாந்து அணி

அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் கூட்டணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

37 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் சால்ட் போல்டு ஆக, பட்லர் (Jos Buttler) 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

வில் ஜேக்ஸ் (10), பேர்ஸ்டோவ் (7) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மொயீன் அலி(Moeen Ali )அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ஓட்டங்கள் எடுத்தார்.

எனினும் அவுஸ்திரேலிய (Australia)அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து(England) அணி 6 விக்கெட் இழந்து 165 ஓட்டங்கள் பெற்று தோல்வியடைந்தது.

பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டும், ஹேசில்வுட் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வை அறிவித்துள்ள மற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version