Home இலங்கை சமூகம் ராகம பகுதியில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

ராகம பகுதியில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

0

T-56 ரக துப்பாக்கியொன்று மற்றும் ஒரு தொகுதி தோட்டாக்கள் நேற்று (23.12.2025) ராகம காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று (23.12.2025) இரவு ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த இடத்தில் காணப்பட்ட மோட்டார் ரக வாகனமொன்றை ராகம காவல்துறையினர் சோதனையிட்டனர்.

சோதனை

இதன்போது, குறித்த வாகனத்திற்குள் இருந்து இந்தத் துப்பாக்கியும், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை குறித்த இடத்திலேயே சந்தேகநபர்கள் கைவிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version