Home இலங்கை சமூகம் சாதாரண தரத்தில் சிறந்த சித்தி பெற்ற தைக்கொண்டோ வீராங்கனை

சாதாரண தரத்தில் சிறந்த சித்தி பெற்ற தைக்கொண்டோ வீராங்கனை

0

அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தைக்கொண்டோ போட்டியில்
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியை சேர்ந்த டிவொன்சி என்னும் மாணவி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை
படைத்துள்ளதுடன் க.பொ.த சாதாரண தர பரீட்சையிலும் 9A சித்திகளை பெற்றுள்ளார். 

கடந்த 28,29,30 ஆகிய தினங்களில் இரத்தினபுரியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ
(Taekwondo) போட்டியில் குறித்த மாணவி பங்குபற்றியுள்ளார். 

வெண்கலப்பதக்கம் 

இதன்போது, அவர் 18 வயது பிரிவில் 59 – 63 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்று
வெண்கலப்பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும்
பெருமை சேர்த்துள்ளார்.

சென்சை தேசிந்தன் என்பவரின் பயற்றுவிப்பில் குறித்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி
தற்பொழுது வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெற்று
சித்தியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version