தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று வெடித்துள்ளது.
குறித்த இளைஞன் கடந்த 19ஆம் திகதி ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்துக்கு காரணமானவரை கைது செய்யுமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரின் உறுதி
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், விபத்துக்கு காரணமானவரை கைது செய்வதாக உறுதியளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
