Home இலங்கை சமூகம் இலங்கை கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா…! நிபுணர் வெளியிட்ட உண்மை தகவல்

இலங்கை கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா…! நிபுணர் வெளியிட்ட உண்மை தகவல்

0

இலங்கையில், அமைக்கப்பட்டுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கங்களை (Earthquakes) தாங்கும் சக்தி கொண்டது என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகளை தொடர்ந்து இலங்கையின் நிலை தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும், இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது.

வானுயர்ந்த கட்டடங்கள்

இலங்கையில் தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன  வானுயர்ந்த கட்டடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.

 இலங்கையிலும் தற்போது  சர்வதேச கட்டுமானத் தரம் கொண்ட நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது.

அத்துடன், நகரத்தைத் தாக்கும் பாரிய நிலநடுக்கத்தில் கூட, கொழும்பு வானுயர்ந்த கட்டிடங்கள் தாங்கும் சக்தி கொண்டவையான உள்ளன” என நிபுணர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version