Home சினிமா காதலரை பிரேக்கப் செய்த நடிகை தமன்னா.. அனைத்து போட்டோக்களை நீக்கிய நடிகை

காதலரை பிரேக்கப் செய்த நடிகை தமன்னா.. அனைத்து போட்டோக்களை நீக்கிய நடிகை

0

நடிகை தமன்னா கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது அவர் ஹீரோயினாக நடிப்பதை விட கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிவிடுகிறது. அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கே தமன்னாவுக்கு பல கோடிகள் சம்பளமாக தர தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

தமன்னா கடந்த சில வருடங்களாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை தான் காதலித்து வந்தார். ஜோடியாக நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வெளிநாடு ட்ரிப் என ஜோடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆனது.

பிரேக்கப்

இந்நிலையில் தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் இன்ஸ்டாவில் இருக்கும் போட்டோக்களையும் நீக்கிவிட்டனர்.

சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் பிரிந்துவிட்டதாகவும், பிரேக்கப் செய்தாலும் இனி நண்பர்களாக மட்டும் இருக்க அவர்கள் முடிவெடுத்து இருப்பதாகவும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version