Home இலங்கை சமூகம் நாட்டில் அதிகரித்த கறி புளியின் விலை!

நாட்டில் அதிகரித்த கறி புளியின் விலை!

0

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் சடுதியாக புளியின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை 1000 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலர் வலயங்களில் புளி விளைச்சல் காணப்படும் நிலையிலும் புளியின் மொத்த விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புளியின் சில்லறை விலை

மொத்த விலை அதிகரிப்பு காரணமாக 100 கிராம் எடையுடைய புளியின் சில்லறை விலை 150 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில், ஒரு கிலோ கிராம் புளியின் சில்லறை விலை 1,500 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தைக்கு போதியளவு புளி கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகி உள்ளதாக வர்த்தக மத்திய நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version