Home இலங்கை சமூகம் திருகோணமலையில் தமிழ் ஆர்வலர் விசாரணைக்கு அழைப்பு!

திருகோணமலையில் தமிழ் ஆர்வலர் விசாரணைக்கு அழைப்பு!

0

திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் கே.சிந்துஜன், கடந்த இரண்டு மாதங்களில்
இரண்டாவது முறையாக, இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப்
பிரிவால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய செயற்பாட்டாளரான சிந்துஜனை, இன்று
முற்பகல் 9 மணிக்கு திருகோணமலை அலுவலகத்துக்கு வருமாறு, பயங்கரவாத எதிர்ப்பு
மற்றும் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்திலும் அவர் விசாரணைக்கென்று அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்போது, விடுதலைப்புலிகளின் போராளி திலீபனுக்கு 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட
நினைவு நிகழ்வு தொடர்பாக சிந்துஜன் விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version