Home இலங்கை சமூகம் திருமலையில் மதத்தலைவர்களை சந்தித்த தமிழ் தொழிலதிபர்

திருமலையில் மதத்தலைவர்களை சந்தித்த தமிழ் தொழிலதிபர்

0

புலம்பெயர் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் திருகோணமலையில் மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்புக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.09.2024) இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை தென்கலை ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் கிறிஸ்டின் ஆகியோரையே அவர் சந்தித்துள்ளார்.

ஆராயப்பட்ட விடயங்கள்

இந்தச் சந்திப்புகளின் போது, தற்போதிருக்கக் கூடிய இளைஞர்களின் எதிர்காலம், வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் தீர்வு நோக்கிய பயணங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source: https://tamilwin.com/article/tamil-businessman-who-met-religious-leaders-1725373589

NO COMMENTS

Exit mobile version