Home இலங்கை சமூகம் அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

0

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மானிய வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்க சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீடு

மேலும், எதிர்காலத்தில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்க சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனம் உருவாக்கப்படவுள்ளதுடன் அதற்கான புதிய சட்டங்களும் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.

சொத்துக்களை உருவாக்கும் புதிய முதலீடுகளை குறிப்பிடுவதுடன் முறையான ஓய்வூதிய திட்டமிடல் முறையை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version