Home இலங்கை அரசியல் சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

0

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் சஜித் பிரேமதாசாவுக்கு (Sajith Premadasa) விழவிருக்கும் வாக்குகளை குறைப்பதற்காகவே
நன்கு திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடு என முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ் எம்
அமீரலி (Ameer Ali) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் கூறுகையில், தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அவர்கள் யோசிக்காமல் எடுத்த ஒரு முடிவாகும்.

தமிழ் தேசியத்தின் மூலம் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டுமாக இருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டினை
முன்னெடுக்க வேண்டும்.

தோல்வி அடையும் நிகழ்ச்சி

அவர்களது எதிர்பார்ப்புகள் 15 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை எடுத்து சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டுமே தவிர ஆயிரக்கணக்கான வாக்குகளை எடுத்து இவர்கள் தேசியத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இவர்கள் சொல்லுகின்ற செய்தி வாக்குபலத்திலேயே உள்ளது.

தமிழ் ( தலைவர்) தலைமைகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் இதனை முன்னெடுக்க முடியாது.

இது ஒரு தோல்வி அடையும் நிகழ்ச்சியாகும் இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அது சிறப்பானதாக இருக்கும் இது சஜித் பிரேமதாசாவுக்கு விழவிருக்கும் வாக்குகளை குறைப்பதற்காகவே நன்கு திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடு இந்த புது வேட்பாளர் விடயமாகும்.

இது ஒரு குத்தகைக்கு அமர்த்தபட்ட உதயம் ஆகும்” என தெரிவித்துள்ளர்.

NO COMMENTS

Exit mobile version