நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக மாறி வருவது தமிழ் பொது வேட்பாளரின் வருகையாகும்.
கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஆகியோர் தமிழ் மக்களின் உரிய பிரச்சினைகளை தீர்க்காத காரணத்தினால் இன்று ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனடிப்படையில், நடைபெறப்போகும் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த தமிழ் பொது வேட்பாளர் விடயம் குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமும் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிடையேயும் பலதரப்பட்ட கருத்துக்கள் முனவைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A Sumanthran) தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக நான் பிரச்சாரங்களில் முதன்மையாக நின்று செயற்படுவேன் என தெரிவித்திருந்தார்.
தமிழ் பொது வேட்பாளர்
அத்தோடு, காசுக்காக ஒரு தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R. Chanakyan) தெரிவித்தாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (Govindan Karunakaram) ஊடங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதுவரை தமிழர் பிரதேசங்களுக்கு சென்று வாக்குகளை கோராத அரசியல்வாதிகள் தற்போது தமிளர்களை நாடுவதாகவும் பொது வேட்பாளர் என்ற கருப்பொருள் பிரதான வேட்பாளர்களிடத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .சிறீதரன் (S. Shritharan) சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறாக தமிழ் பொது வேர்ப்பாளரை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கின்ற நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பராளர்களின் தாக்கம் குறித்து ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/qsUWPUKED_I?start=616