Home இலங்கை சமூகம் மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு

0

மட்டக்களப்பு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் இன்று(18) தீபச்
சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மே 18 தமிழ் இன அழிப்பின் நினைவேந்தல் வாகரை
முகத்துவாரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர் கட்டித்தில் கட்சியில்
தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

நினைவேந்தல் அனுஸ்டிப்பு

இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரன் உட்படகட்சியின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான
பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி
அனுஷ்டித்தனர்.

NO COMMENTS

Exit mobile version