Home இலங்கை அரசியல் கனடாவில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி.. பெரும் அதிர்ச்சியில் அநுர அரசு!

கனடாவில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி.. பெரும் அதிர்ச்சியில் அநுர அரசு!

0

தமிழர் தரப்பில், நேற்றைய தினம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கனடாவில் பிரம்டனில் அமைக்கப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி இடம்பிடித்துள்ளது. 

ஈழத்தமிழரகளுக்கு அளிக்கப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என கனடா – பிரம்டன் மாநகரத்தின் முதல்வர் பட்ரிக் பிரவுண் கடுமையாக தெரிவித்துள்ளார். 

அத்துடன், கனடாவில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிக்கும் பணியில் தான் எதிர்கொண்ட பல சிக்கல்களையும் சவால்களையும் பற்றியும்  பட்ரிக் பிரவுண் அங்கு சுட்டிக்காட்டியிருந்தார். 

அந்தவகையில், குறித்த நினைவுத்தூபியை அமைக்கும் பணிக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த குடைச்சல்கள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version