Home இலங்கை சமூகம் தமிழக அரசாங்கத்தின் கடற்றொழில் தடை நிறைவு: கடற்றொழிலாளர்களின் தீர்மானம்

தமிழக அரசாங்கத்தின் கடற்றொழில் தடை நிறைவு: கடற்றொழிலாளர்களின் தீர்மானம்

0

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட 61 நாட்கள் கடற்றொழில் நிறைவடையவுள்ள நிலையில், இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு கடற்றொழிலாளர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை(16) கடலுக்கு செல்ல போவதாக முடிவு
செய்துள்ளனர்.

மேலும், கடல் சீற்றத்துடன் இருப்பதால் கடற்றொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள்
சென்று இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் படி கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என
கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மல்லிப்பட்டினத்தில் நடந்த ஆறு மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஆலோசனை
கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடைக்காலம் 

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட 61 நாள் கடற்றொழில் தடைக்காலம் கடந்த ஏப்ரல்
மாதம் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி இன்று(14) நள்ளிரவுடன்
நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version