கணக்காளர் தரம் 1ஐச் சேர்ந்த 13 கணக்காளர்கள் பொதுச் சேவை ஆணைக்குழுவால்
கணக்காளர் சேவை விசேட தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
2025.01.01 முதல் இந்தத் தர உயர்வு நடைதுறையாகும் என 2025.04.28 ஆம் திகதிய
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மூவர்
இவ்வாறு கணக்காளர் சேவை விசேட தரத்துக்குத் தேர்வான 13 கணக்காளர்களில் மூவர்
தமிழர்களாகவும், எஞ்சியோர் சிங்களவர்களாவும் காணப்படுகின்றனர்.
பதவி உயர்வு பெறுவோர் பட்டியலில் எஸ்.சுரேஜினி, எஸ்.ஆர்.சிவரூபன் மற்றும்
கே.கமலரூபன் ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றன.
