Home இலங்கை அரசியல் வவுனியாவில் குடியேறிய சிங்களவர்களுக்கு சிக்கலா!

வவுனியாவில் குடியேறிய சிங்களவர்களுக்கு சிக்கலா!

0

வவுனியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை வெளியேறுமாறு தேசியமக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரகளை விழித்து அவர் கேள்வி எழுப்பிய போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மகாவலி அதிகார சபை

இந்நிலையில் வவுனியா போகஸ்வெவ சிங்கள கிராமத்திலுள்ள இராணுவத்தால் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களையே இவ்வாறு வெளியேற பணித்துய்யதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கு தெரிவித்திருந்த போதும்,  அவர்கள் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அவர்களை வெளியேறுமாறு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போகஸ்வெவ மக்கள், “யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு மீள் குடியேறி இராணுவம் செய்து கொடுத்த அடிப்படை வசதிகளுடன் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தோம்.

எமது காணிகள் மகாவலி எல் வலையத்திற்கு உரித்துடையதாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பின் ஜெகதீஸ்வரன் எம்.பி ஆனந்தராஜா மற்றும்
பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்ச்செல்வன் – தவபாலன் ஆகியோர் குறித்த வயல் நிலங்கள் தமிழ் மக்களுடையது வெளியேறுமாறு கூறுகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version