Home இலங்கை சமூகம் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி…! நெகிழ்ச்சி செயல்

16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி…! நெகிழ்ச்சி செயல்

0

‘தமிழ் அரசியல் கைதி’யாக 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர்
சதீஸ் என்ற அரசியல் கைதி, நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய,
‘துருவேறும் கைவிலங்கு’ எனும் ஆவண நூலின் ஆய்வறிமுக நிகழ்வானது, அண்மையில்
பிரான்ஸ் தலைநகர் பரிசில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தது.

நூல் அறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெறுகின்ற ஊக்கத்தொகை முழுவதும், மீதமுள்ள சக
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செயற்பாட்டிற்கு உதவ வேண்டும்” என்கின்ற,
நூலாசிரியரின் நன் நோக்கமாக இருந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலை

அதற்மைய, நிகழ்வரங்கில் தேறிய நிதித் தொகையை அந்த அரசியல் கைதியின் தாயாரான
செல்லையா பவளவள்ளி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக செயற்பட்டு
வருகின்ற, தன்னார்வ மனிதநேய செயலமைப்பான ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர், மு.கோமகன் மற்றும் செயற்பாட்டாளர் போ.அருள்வந்தனா ஆகியோரிடம் கையளித்துள்ளார்.

இதேபோன்று, இந்நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வானது, 2023ஆம் ஆண்டு நோர்வே
தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றிருந்த போது கிடைக்கப்பெற்ற ஊக்கத்தொகையும்
‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் செயலூக்கத்திற்காக கையளிக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version