Home முக்கியச் செய்திகள் தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதியின் படுகொலை: எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதியின் படுகொலை: எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை

0

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa Prison) படுகொலை செய்யப்பட்ட தமிழ்க் கைதியின் பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க கூறுகையில்,“ குறித்த கைதி நேற்று (04.04.2025) அதிகாலை காயமடைந்த நிலையில் அவரது அறையில் கிடந்தார்.

உயிரிழந்த கைதி

பின்னர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார்.

குறித்த கைதி போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாகவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகளிடமிருந்து தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த கைதியின் உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version