Home இலங்கை சமூகம் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் மாணவன்

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் மாணவன்

0

கொழும்பு மாவட்டம், கெஸ்பவை பிரதேசத்தில் தமிழ் மாணவன் ஒருவர் வீட்டிலிருந்து
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18
வயதுடைய மாணவனே தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், நேற்று(21.01.2024) இடம்பெற்றுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனை

சம்பவத்தில் யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை
மாய்த்திருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version