தாங்களும் சேர்ந்து தமிழர்களை கொன்று புதைத்துவிட்டு இன்று தங்களை புனிதர்கள் போல காட்டி தற்போதைய அரசாங்கம் மக்களை திசைத்திருப்புகின்றனர் என சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் (Kanagaratnam Sugash) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்கள் முட்டாள்கள் அல்ல அத்தோடு வரலாற்றை மறப்பவர்களும் அல்ல.
இந்த செம்மணி மனித புதைக்குழியுடன் தங்போதைய அரசாங்கமும் தொடர்புடையது என்பது எங்களுக்கு தெரியும்.
ஆகவே, இதற்கு பொறுப்புகூற வேண்டிய கட்டாயம் தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ள நிலையில், விசாரணை உரிய முறையில் நடத்தப்பட்டால் அவர்களும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/sfiC5hztz9Y