Home இலங்கை சமூகம் அவிசாவளையில் முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த தமிழ் யுவதி மரணம்!

அவிசாவளையில் முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த தமிழ் யுவதி மரணம்!

0

அவிசாவளை, சீதாவகபுர பகுதியில் இயங்கி வரக்கூடிய முன்னணி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 14 வருடங்களாக பணி புரிந்து வந்த தமிழ் யுவதியொருவரே கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பரமசிவம் புஷ்பலதா எனப்படும் குறித்த யுவதி கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடர்ச்சியாக பணி புரிந்துகட கொண்டிருந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக தொழிற்சாலை நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்த போதிலும் அவருக்கான பணி நேரம் நிறைவடையும் வரையில் அவர் செல்ல அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மரணத்திற்கு நீதி

இதன் விளைவாக, அன்றைய தினம் மாலை வேளையில் அவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதேவேளை, இவ்வாறு நிர்வாகத்தினரின் பொறுப்பின்மை காரணமாக உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு நீதி கோரிய சமூக ஆர்வலர்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம் மற்றும் ஐக்கிய பொது தொழிலாளர் சங்கத்தின் இரண்டு ஆர்வலர்கள் இந்த சம்பவம் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, விடுப்பு உரிமை மற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கி சேருவதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்னணி நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட குழுவினர் மூலமே இவ்வாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version