Home இலங்கை சமூகம் முத்தையன்கட்டில் தமிழ் இளைஞனின் படுகொலை: இராணுவ பேச்சாளரின் கருத்து

முத்தையன்கட்டில் தமிழ் இளைஞனின் படுகொலை: இராணுவ பேச்சாளரின் கருத்து

0

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தருக்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை என இராணுவ பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஒகஸ்ட் 7 அன்று இரவு, சிலர், ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமிற்குள் நுழைய முற்பட்டதை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினார்கள்.

இளம் குடும்பஸ்தரின் சடலம்

அவர்களில் ஒருவர் படையினரால் கைதுசெய்யப்பட்ட போதிலும் ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை. கைது செய்யப்பட்டவரையும் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்.

இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறித்த இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

கைது செய்யப்பட்ட மூன்று இராணுவத்தினரும் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், உள்நோக்கங்களை கொண்ட பல்வேறு தரப்பினரும் இந்த விடயத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version