கொழும்பு (Colombo) கோட்டை பிரதான நீதவானாக கடமையாற்றிய தனூஜா லக்மாலி, கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிச்சேவைகள் ஆணைக்குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.
மேலதிக நீதவான்
கொழும்பு பிரதான நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே, மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தற்போதைக்கு கல்கிஸ்ஸை நீதவானாக செயற்படும் நிலுபுலி லங்கா, உடனடியாக கொழும்பு கோட்டை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவை மேலதிக நீதவானாக கடமையாற்றிய சதுரிக்கா சில்வா, கல்கிஸ்ஸை நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்.