Home அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான வரி! ட்ரம்பின் தீர்மானம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான வரி! ட்ரம்பின் தீர்மானம்

0

மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். 

குறித்த அறிவிப்பை தனது ட்ரூத் சமூக வலைத்தளக் கணக்கில் பதிவிட்டதன் மூலம் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வரிக் கொள்கை ஒகஸ்ட் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

விரிவான வர்த்தக ஒப்பந்தம்

முக்கிய வர்த்தகப் பங்காளிகளுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதையடுத்து, வரிகளை விதிப்பதற்கு ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், இலங்கை மற்றும் ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் பிரேஸில் உள்ளிட்ட பல நாடுகள் மீது புதிய வரிகளை ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version