Home முக்கியச் செய்திகள் கனடியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

கனடியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

0

கனடாவில் தற்பொழுது அறவிடப்பட்டு வரும் பொருட்கள் சேவைகளுக்கான வரியானது குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆளும் லிபரல் கட்சியும் என்.டி.பி கட்சியும் இது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டு மற்றும் நத்தார் பண்டிகையை காலப்பகுதியில் கனடிய நுகர்வோருக்கு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

வரி சலுகை

இதன்படி, சுமார் இரண்டு மாத காலத்திற்கு இவ்வாறு வரி சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களினால் அப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/tax-exemption-good-news-from-gov-for-canada-people-1732255747?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version