Home இலங்கை பொருளாதாரம் கடந்த ஆறு மாதங்களில் இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டியுள்ள சுங்கத்துறை..

கடந்த ஆறு மாதங்களில் இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டியுள்ள சுங்கத்துறை..

0

இலங்கை சுங்கத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக ஈட்டியுள்ளது.

முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

அதிகரித்த வருவாய் 

இலங்கை சுங்கத் திணைக்களம் முன்னதாக நிர்ணயித்துள்ள இந்த ஆண்டுக்கான வரி இலக்கு 2,206.9 பில்லியன் ரூபாயாகும்.

அதன்படி, முதல் ஆறு மாதங்களுக்குள் 1,060 பில்லியன் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் அந்தக் காலகட்டத்தில் 1,373 பில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட 22 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வாறு நிகழவில்லை என்றும், வரி வருமானம் அதிகரித்துள்ளது என்றும் சுங்கத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.  

Source: https://tamilwin.com/article/tax-revenue-received-by-the-customs-department-1784258163

NO COMMENTS

Exit mobile version