Home இலங்கை பொருளாதாரம் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி….

தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி….

0

 கறுப்பு தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டில் 5000 டொன்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் (2025) மொத்தத் தேயிலை ஏற்றுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய தேயிலை வளர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் பச்சைத் தேயிலை (green tea) மற்றும் விசேட தேயிலை வகைகளின் ஏற்றுமதி வளர்ச்சி வருமானம் அதிகரிப்பதற்குப் பங்களிப்பு செய்துள்ள அதேவேளை ரஷ்யா, ஈரான், துருக்கி, ஜப்பான், ஐக்கிய அரபு இராஜிளம், ஜேர்மனி, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்து சிலோன் தேயிலைக்கான (ceylon tea) தேவை நிலவுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏற்றுமதியில் ஏற்பட்ட மாற்றம்

கடந்த ஆண்டில் மொத்தத் தேயிலை ஏற்றுமதி 2,55,000 தொன் முதல் 2,65,000 தொன்களுக்கு இடைப்பட்ட மட்டத்தில் காணப்பட்டதாகவும் அதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 1.25 – 1.35 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த ஆண்டில் கறுப்புத் தேயிலை (black tea) ஏற்றுமதியானது கிட்டத்தட்ட 90 சதவீதமாகக் காணப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டில் சுமார் 2,35,000 – 2,45,000 தொன் கறுப்புத் தேயிலையும் 9,000 – 11,000 தொன் பச்சைத் தேயிலையும்  6,000 – 8,000 தொன் கரையும் தேயிலையும் அத்துடன் 4,000 – 6,000 தொன் விசேட தேயிலையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

Source: https://tamilwin.com/article/tea-exporters-in-sri-lanka-1780277219

NO COMMENTS

Exit mobile version