பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்பட்ட QR முறையின் கீழ் தேயிலை உரங்களை வழங்கும் செயல்முறை தற்போது உயர் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதில் எழுந்துள்ள சிக்கல்களச் சமாளிக்க இந்த செயல்முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, QR முறையின் கீழ் புதிய உரங்களை விநியோகிக்கும் பணி அக்டோபர் 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கை அடையும் நோக்கம்
2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோவாகவும், தேயிலை ஏற்றுமதி வருவாயை 2.5 பில்லியன் டொலர்களாகவும், தேசிய இலக்கை அடையும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்கம் தற்போது சிறு மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு 50 கிலோ உர மூட்டை ரூ. 4000 மற்றும் 25 கிலோ உர மூட்டைக்கு ரூ. 2000 இற்கும் வழங்கி வருகின்றது.
(31) ஆம் திகதி நிலவரப்படி இந்த உர விநியோக முறை மூலம் 95,230 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 67,056 விண்ணப்பங்கள் குறித்த திகதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
QR குறியீடுகளை வழங்குவதன் மூலம் 49,548 விவசாயிகளுக்கு 187.4 மெட்ரிக் டொன் மானிய விலையில் தேயிலை உரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
