Home இலங்கை சமூகம் சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

0

சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை
நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை
இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (23) மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

நியமன கடிதங்கள்

இதன்போது,  பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நியமன கடிதங்கள் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்
திரு.சுந்தரலிங்கம் பிரதீப், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தன, நாடாளுமன்ற உறுப்பினரும் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான
திரு.சாந்த பத்மகுமார,சுனில் ராஜபகக்ச ஆகியோர்களால் வழங்கி வைக்கப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version