Home இலங்கை கல்வி ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை குறித்து வெளியான தகவல்

ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை குறித்து வெளியான தகவல்

0

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னாட்சி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்ததை சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நியமன ஏற்பாடுகள் 

அத்தோடு, செப்டெம்பர் நான்காம் திகதி வரை இந்த இடைகால தடையுத்தரவு நடைமுறையில் இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆசிரிய உதவியாளர் நியமன ஏற்பாடுகள் முறையாக நடக்கவில்லை என்பதாக தெரிவித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version