Home சினிமா சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் திரைப்படம்!! போலீசாரில் புகார்..

சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் திரைப்படம்!! போலீசாரில் புகார்..

0

விக்ரம்

தாங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம், சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். 

இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாள் முன்னிட்டு, படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் சண்டை போடும் காட்சி இருந்தது. வீர தீர சூரன் படத்தின் டீசரில் விக்ரம் கத்தி மற்றும் அருவாள் உடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளிவந்து.

புகார் 

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர், படத்தின் போஸ்டருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலயில் வீர தீர சூரன் படத்தில் விக்ரம் இரண்டு கையில் கத்தி வைத்துள்ள போஸ்டர் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது இன்றைய தலைமுறைகளை பாதிக்கிறது, தவறான எண்ணத்தை உருவாக்குகிறது.படக்குழு மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version