Home இலங்கை குற்றம் பாடசாலை நேரத்தில், பிரத்யேக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை

பாடசாலை நேரத்தில், பிரத்யேக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

அனுராதபுரத்தில் செயற்படும் முன்னணி அரசப் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், பாடசாலை நேரத்தில், பிரத்யேக வகுப்புகளை நடத்தியதாக, குற்றம் சுமத்தப்பட்டு,  உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் கணித ஆசிரியர்,  பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகளை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அவர் அடிக்கடி பாடசாலையில் வருகையை பதிவு செய்து விட்டு, பிரத்யேக கல்விக் கற்பிப்பதற்காக செல்வதாகவும் பிரதேசவாசிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்து வந்துள்ளன.

களச் சோதனை

இதனையடுத்து, கடமை நேரத்தில் சாலியபுர பிரதேசத்தில், பிராத்யேக வகுப்பு நடத்தும் குறிப்பிட்ட ஆசிரியரைக் கண்டறிவதற்காக, வலயக்கல்வி பணிப்பாளர் மேற்கொண்ட, களச் சோதனையின் போது, உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஆய்வின் போது, ​​குறித்த ஆசிரியர் உரிய அனுமதியின்றி இந்த ஆண்டு 26 நாட்கள் விடுப்பு பெற்றிருந்தமையும் தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version