Home இந்தியா இந்தியாவில் பரபரப்பு – ஆசிரியரின் பாலியல் சீண்டல் : தனக்குத் தானே தீயிட்ட மாணவி

இந்தியாவில் பரபரப்பு – ஆசிரியரின் பாலியல் சீண்டல் : தனக்குத் தானே தீயிட்ட மாணவி

0

மாணவி ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் (India) ஒடிசாவில் (Odisha) பதிவாகியுள்ளது.

தலைமை ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாமல் குறித்த மாணவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தலைமை ஆசிரியர் 

மேலும், தீக்காயங்களுக்குள்ளான மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநில உயர் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த சம்பவத்தில் மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது தீக்காயங்களுக்குள்ளான மற்றுமொரு மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/hTLxyy7HeTU

NO COMMENTS

Exit mobile version