Home இலங்கை சமூகம் அதிக சம்பளம் பெறும் துறைகளுக்குள் உள்ளடக்கப்படவுள்ள முக்கிய கல்வி சேவைகள்

அதிக சம்பளம் பெறும் துறைகளுக்குள் உள்ளடக்கப்படவுள்ள முக்கிய கல்வி சேவைகள்

0

ல்வித் துறையில் சம்பள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட ஐந்து முக்கிய கல்வி சேவைகளை, நாட்டின் அதிக சம்பளம் பெறும் 10 தொழில்களில் ஒன்றாக உயர்த்துவதற்கும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினை

மஹரகமயில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பிரதி அமைச்சர், கல்வித் துறையில் ஊதியத்தை மேம்படுத்துவதற்கும் நீண்டகாலமாக நிலவும் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கம் தாக்கல் செய்யும் பாதீட்டில், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அதிகரிப்பு இருக்கும். அதைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்று ஜெயசிங்க கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version