Home இலங்கை சமூகம் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கம்

ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கம்

0

தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர்
சங்கத்தினரால்  நேற்றையதினம்(03)  வடமாகாண ஆளுநர் தலைமை செயலகத்துக்கு முன்னால்
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து ஆளுநர் செயலகம் வரை
பேரணியாக சென்ற நிலையில் பொலிஸார் ஆளுநர் செயலகத்துக்குள் அனுமதிக்காமல்
வாசலில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரை மட்டும் உள்ளே சென்று ஆளுநருடன்
பேசலாம் என தெரிவித்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரைசந்திப்பதற்காக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ காரணங்களுக்காக.. 

வடமாகாண ஆளுநர் வேதநாயகனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை
கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழில் இருந்து வெளி மாகாணங்களுக்கு ஆசிரியர் சேவையை செய்தவர்கள் மீண்டும்
வெளி மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களுக்காக தமது வெளி மாவட்ட இடமாற்றங்களை இரத்து
செய்யுமாறு மேன் முறையீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை கருணை அடிப்படையில்
பரிசீலனை செய்ய வேண்டும்.

வெளிமாவட்டம் செல்லாது பல ஆசிரியர்கள் தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில்
சேவையாற்றி வரும் நிலையில் பாரபட்சமின்றி இடமாட்டங்களை வழங்க வேண்டும் போன்ற
கோரிக்கைகளை ஆளுநரிடம் முன் வைத்திருக்கிறோம்.

குறித் விடயங்கள் தொடர்பில் சாதகமாக பரிசீலனை செய்து விரைவில் அறிவிப்பதாக
ஆளுநர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version