Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

விவசாயிகளுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0

‘டித்வா’ புயலின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து அறிவிப்பதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, 1918 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் விவசாயிகள் பயிர் சேதங்கள் குறித்து மிக இலகுவாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

‘டித்வா’ புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்பட்டது.

 தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு

அதற்கமைய, குறித்த பயிர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் எதிர்பார்ப்புடன் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தற்போது பயிர் சேதங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகளில் 20 மாவட்டங்களில் சுமார் 75 சதவீதம் ஆனவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version