Home உலகம் ரொறன்ரோவில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறையினர்!

ரொறன்ரோவில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறையினர்!

0

கனடாவின்(Canada) – ரொறன்ரோ நகரில் தொலைபேசி ஊடான மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்று போலியாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் ரொறன்ரோ காவல்துறையினர் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

போலி அழைப்புகள்

இந்த மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர்கள் காவல்துறை உத்தியோகத்தர்களை போன்று தொலைபேசியில் உரையாடி நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல் நிலைய இலக்கத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவது போன்று ஏற்படுத்தப்படுவதாகவும் உண்மையில் அவ்வாறு அழைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிலர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தகவல்கள் திரட்டப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவதாகவும் இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் ரொறன்ரோ காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version