Home இலங்கை சமூகம் கிளிநொச்சி உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கிளிநொச்சி உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

வடக்கு மற்றும் கிழக்கில் பல பகுதிகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சி – பல்லவராயன்கட்டு, அக்கராயன்குளம், அறிவியல்நகர், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் சூரியன் இன்று(29.08.2025) உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை 

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்று எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் எனவும் அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலையில் அதிக வெப்பமான வானிலை நிலவும் போது, வெளிக்கள நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்வது சிறப்பானது எனவும் உடல்நிலைக்கு ஏற்ற அளவில் அதிகமான நீரை பருகுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிக வெப்பம் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version