தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சப்ரகமுவ சுமண சமன் தேவாலயத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாசங்கத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்காலிக தீர்வு
இரத்தினபுரி சுமணசமன் தேவாலய பஸ்நாயக்க நிலமேயின் பதவிக்காலம் நிறைவடைந்திருந்த நிலையில், சமய அலுவல்கள் திணைக்களத்தினால் தற்காலிகமாக வேறொருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவ்வாறு நியமிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதாக கூறி, அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆலய நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேவாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மகாசங்கத்தினர் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டின் பேரில் நேற்று தொடக்கம் சுமணசமன் தேவாலயம் , வழிபாடுகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.