Home இலங்கை சமூகம் பேருந்து ஆசன முன்பதிவு இடைநிறுத்தம் : வெளியான அறிவிப்பு

பேருந்து ஆசன முன்பதிவு இடைநிறுத்தம் : வெளியான அறிவிப்பு

0

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது.

பேருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழு

மேலும், பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்தில் பேருந்துகள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சாரதியொருவரின் கடமை நேரம் 14 மணித்தியாலங்களுக்கு மேற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மற்றுமொரு சாரதியை பணிக்கமர்த்த வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட சுற்றுலாப் பயணங்களுக்கு ஈடுபடுத்துவதும் புத்தாண்டு காலப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/88giR9IT_5E

NO COMMENTS

Exit mobile version