Home இலங்கை சமூகம் கற்பிட்டியில் போராட்டத்தின்போது பதற்றம்

கற்பிட்டியில் போராட்டத்தின்போது பதற்றம்

0

புத்தளம் கற்பிட்டியில் நேற்று(10) இடம்பெற்ற போராட்டத்தின்போது பதற்றநிலை
ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு பேர், குறித்த கிராமத்தின் பொதுமகனை
தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கடற்படை
மற்றும் பொலிஸார், போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறி,
பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின்போதே இந்த பதற்றம் ஏற்பட்டது.

கடற்படையினர் மறுப்பு

போராட்டத்தின்போது, கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில்
உடையில் சென்ற இருவர், போராட்டத்தை வீடியோ செய்தபோதே, பதற்றநிலை ஏற்பட்டது.

எனினும், நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று
உறுதியளித்த பின்னர் நிலைமை சுமுகமானது.

இந்தநிலையில், கிராம பொதுமகனை தாக்கியது மற்றும் பிரதேசத்தில் போதைப்பொருள்
கடத்தலுக்கு ஆதரவளிப்பது உட்பட்ட குற்றச்சாட்டுகளை கடற்படையினர் மறுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version