முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றற் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முறுகல் நிலை
இந்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல்களில் காணப்படும் இடர்பாடுகளால் பல மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி வேறு பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், முன்னதாக பாடசாலையில் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது குறித்த போராட்டம் முன்னெடுக்கப்ட்டது.
இதில் மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அங்கு வந்த பாடசாலை அதிபர் மாணவர்களை தாக்கியதை அடுத்து பெற்றோருக்கும் பாடசாலை சமூக்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
