Home இந்தியா தொடர்ந்தும் இது நடந்தால்..! இந்தியாவுக்கு பாகிஸ்தானின் பகிரங்க மிரட்டல்

தொடர்ந்தும் இது நடந்தால்..! இந்தியாவுக்கு பாகிஸ்தானின் பகிரங்க மிரட்டல்

0

இந்தியாவின் நடவடிக்கைகளால் பதற்றங்கள் தொடர்ந்து அதிக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார்.

இந்திய தரப்பின் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதன் காரணமாக பாரிய மோதல் ஒன்று உடனடியாக நிகழும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமு்ம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், “ அவர்கள் கிட்டத்தட்ட 78 விமானங்கள் மூலம் எங்களைத் தாக்கினர், மேலும் ஐந்து விமானங்கள் எங்கள் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பதிலடி 

எனவே இது கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக நடந்து வருகிறது.

நாங்கள் நிலைமையை தணிக்க விரும்புகிறோம், ஆனால் இந்தியத் தரப்பிலிருந்து தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால் நாங்கள் பதிலடி கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம்.

எனவே இந்த மோதல் விரிவடையும் வாய்ப்பு மிகவும் தெளிவாகவும் தெளிவாகவும் உள்ளது,” என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையிலும் இந்த மோதல்கள் நடக்கக்கூடும் என்றும் கவாஜா ஆசிப் மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version