Home இலங்கை சமூகம் யாழ். பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றம்

யாழ். பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றம்

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது
பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார்
பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை
பொலிஸார் தடுத்தபோதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில்
தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட கால வேலையில்லா பிரச்சினை

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள்
நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார்
தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணொளி – கஜிந்தன்

குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார்
ஈடுபட்டுள்ளனர் என அறியப்படுகிறது.

நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version