Home விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீரர் படைத்த உலக சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீரர் படைத்த உலக சாதனை

0

இலங்கை(sri lanka) கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ்(Kamindu Mendis), டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 8 போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஒரு புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இது அவரது டெஸ்ட் அறிமுகத்திலிருந்து நிலையான துடுப்பாட்ட திறமையை எடுத்துக்காட்டுகிறது.

பாகிஸ்தான் வீரர்

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின்(pakistan) சவுத் ஷகீல்(Saud Shakeel )டெஸ்ட் வரலாற்றில் தனது முதல் ஏழு போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் ஆனார்.

எட்டாவது அரைச்சதம்

காலியில்(galle) நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு (new zealand)எதிரான போட்டியில் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு(australia) எதிராக அறிமுகமானதில் இருந்து மெண்டிஸ் தனது எட்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version