Home இலங்கை சமூகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் தீர்ப்பாயம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் தீர்ப்பாயம்

0

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான சர்ச்சையைத் தீர்ப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஒரு தேர்தல் தீர்ப்பாயத்தினை அமைத்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4ஆவது நாடாளுமன்றத் தேர்தல்கள் கடந்த மே 12ஆம் திகதி அன்று நாடுகடந்த முறையில் நடத்தப்பட்டன.

கனடா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நபர்கள் அந்த நேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார்களை அனுப்பியுள்ளனர்.

நிராகரிக்கப்பட்ட  வேட்புமனுக்கள்

கனடாவைப் பொறுத்தவரை, வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தீர்ப்பதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மூன்று பேர் கொண்ட குழுவை (மறுஆய்வு ஆணையம்) நியமித்தார்.

மறுஆய்வு ஆணையம் மே 3ஆம் திகதி அன்று தனது கண்டுபிடிப்புகளை அறிவித்தது, கேள்விக்குரிய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

ஆயினும், கனேடிய உள்நாட்டு தேர்தல்கள் ஆணையம் மறுஆய்வு ஆணைக்குழு பயன்படுத்திய நடைமுறை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மறுஆய்வு ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்கவில்லை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது நாடாளுமன்றம் மே 17 அன்று கூடவேண்டியிருந்தது.

நேரமின்மை காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் கனேடிய உள்நாட்டு தேர்தல் ஆணையர் அளித்த பெயர்களை ஏற்றுக்கொள்ளும்போது – புதிய பிரதமர் இவ்விடயத்தை தீர்ப்பதற்கு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்கும்படி பரிந்துரை செய்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்கள்

மேற்கூறியவற்றின் படி, நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. மூன்று நபர்களைக் கொண்ட தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக, மைட்ரே எய்சர் சௌய்டி, புஷ்பராஜா மற்றும் கனடாவைச் சேர்ந்த நீண்டகால தமிழ்த் தேசிய செயல்பாட்டாளர் பரசுரன் ராஜேந்திரன் இருப்பதுடன் குமாரசா பரராசா ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகின்றார்.

மேலும், தீர்ப்பாயம் இயங்கும் காலப்பகுதி ஜூலை 24, 2024 முதல் அக்டோபர் 24, 2024 வரையாகும். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் (2010) மற்றும் மூன்றாவது (2019) நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தீர்த்துவைக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதேபோன்ற தீர்ப்பாயங்கள் அல்லது மறுஆய்வுக் கமிஷன்களை நியமித்தது.

எந்தவொரு பிரச்சினைகளையும் வெளிப்படையான முறையில் எதிர்கொள்ளும் திறனும் விருப்பமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version