மனித குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாக தமிழர்களின் தைத்திருநாள் இன்று (14.01.2025) கொண்டாடப்படுகின்றது.
உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்குமான ஒரு நன்றியறிதலாகக் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மனிதக் குலத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் நன்றியுணர்வு என்ற மாண்புமிக்க அம்சத்தை வருடத்தில் ஒருமுறை பரீட்சித்துப் பார்க்கும் நாளாகத் தைப்பொங்கல் அல்லது சூரியப்பொங்கல் அமைகிறது.
இந்நிலையில் தாயகத்தின் பல பகுதிகளிலும் தைத்திருநாளை மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட
பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்
தலமையில் இடம்பெற்றது.
இன்று காலை 8:00 மணியளவில் இடம் பெற்றது
முன்னாதாக காலை 5;00 மணியளவில் விசேட ஹோம பூசைகள் இடம்பெற்று, 6:30 மணிக்கு
வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றது.
அதனைத்தொடரந்து வல்லிபுரத்து சக்கரத்து
ஆழ்வார் உள்வீதி வலம் வந்து 8:00 மணியளவில் பொங்கல் இடம்பெற்றது.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
-பு. கஜிந்தன்-
மன்னார்
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல்
பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும்
கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல்
நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது.
மேலும் வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க
தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும்
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-ஜோசப் நயன்-
வவுனியா
வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
வவுனியா
உழவர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து
ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.
அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில்
புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு
தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.
திருகோணமலை
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் இன்று (14) வெகு விமர்சையாக
வீடுகளில் கொண்டாடினர்.
அந்த வகையில் மூதூர் – மல்லிகைத்தீவு பிரதேசத்தில் உள்ள இந்து மக்கள் தமது
வீடுகளில் பொங்கல் பொங்கி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக உழவர் திருநாளை
கொண்டாடியதையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
-மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி-
ஹற்றன்
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மலையகத்திலும் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள்
ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள்
நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும்
இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.
-க.கிஷாந்தன்-
YOU MAY LIKE THIS…
https://www.youtube.com/embed/NOCwEEzTDMUhttps://www.youtube.com/embed/EJiADOWWSAI