Home இலங்கை சமூகம் நீளும் தையிட்டி விகாரை பிரச்சினை: சிவசேனை அமைப்பு அளித்த வாக்குறுதி

நீளும் தையிட்டி விகாரை பிரச்சினை: சிவசேனை அமைப்பு அளித்த வாக்குறுதி

0

யாழ். (Jaffna) தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என
சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(24.02.2025) நடைபெற்ற ஊடக
சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,“மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம்.

தையிட்டி விகாரை பிரச்சினை

இந்த விடயம் தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம்
பேசவுள்ளோம்.

அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும், பௌத்த மத தலைவர்களுடன் கலந்துரையாடி,
விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம்.

அதற்கு எமக்கு குறைந்தது 06 மாத காலமாவது வேண்டும். அதற்குள் தமது அரசியலை
செய்ய முயன்று அதனை குழப்ப வேண்டாம் என கோருகிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/V–GuPJE_Eg

NO COMMENTS

Exit mobile version