Home இலங்கை சமூகம் தையிட்டியில் நடப்பது என்ன : உண்மைகளை உடைத்த காணி உரிமையாளர்

தையிட்டியில் நடப்பது என்ன : உண்மைகளை உடைத்த காணி உரிமையாளர்

0

தையிட்டியில் இராணுவத்தினர் காணியை விடுவிக்கும் போது விகாரையை அழித்துவிட்டு செல்வார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்திருந்தமையே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும் என தையிட்டியில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணியின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் அங்கஜன் இராமநாதன் குறித்த நேரத்தில் அந்தக் கட்டுமானத்தை தடுத்தி நிறுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு பாரதூரமாக வந்திருக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் பிரதிநிதியாக கூறிக்கொள்ளும் இராமநாதன் அர்ச்சுனாவும் (Ramanathan Archchuna) எங்களோடு இணைந்து எங்களுடைய பிரச்சினையை முற்றாக ஆராயாமல் நட்டஈடு வழங்கி எங்களை சமாதானப்படுத்தலாம் என்றும் இது ஒரு அரசியல் பிரச்சினை போல திசைதிருப்பியமை எங்களுக்கு வேதனையளிக்கின்றது.

எங்களுக்கு  சட்ட நடவடிக்கையில் நம்பிக்கையில்லை. அதாவது இங்கே வேலியே பயிரை மேய்கின்றது. அரச தரப்பைச் சேர்ந்த இராணுவத்தினர் காணியை அபகரித்துள்ள போது நாங்கள் எங்கே சென்று நீதியைக் கேட்பது.

எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லாமல் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தினர் (University of Moratuwa) இந்த விகாரைக்கான வரைபடத்தை தயாரித்துள்ளனர்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/jOqcnS7WIvQ

NO COMMENTS

Exit mobile version